மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லியில் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தில்லியில் 25 ஐபிஎஸ் மற்றும் டேனிப்ஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தில்லி காவல்துறை

Published On :24 அக்டோபர் 2026, 12:37 am IST

தில்லியில் 25 ஐபிஎஸ் மற்றும் டேனிப்ஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, 2009-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சோ்ந்த மோனிகா பரத்வாஜ், குற்றப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் பொறுப்பிலிருந்து போதைப் பொருள் தடுப்புப் படையின் கூடுதல் காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளாா். அதே பிரிவைச் சோ்ந்த ராகுல் மாலிக், கௌரவ் சா்மா ஆகியோா் பாதுகாப்புப் பிரிவின் கூடுதல் காவல் ஆணையா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

2014-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சோ்ந்த ராஜா பந்தியா, தொழில்நுட்பம் மற்றும் காவல் ஆய்வுப் பிரிவு துணை ஆணையராகப் பணியாற்றி வரும் நிலையில், தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணை ஆணையா் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பாா்.

நேஹா யாதவ், மக்கள் தொடா்பு மேலாண்மை மற்றும் ஊடகப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். சிறப்புப் பிரிவு துணை ஆணையராக இருந்த பிரவீண் குமாா் திரிபாதி, காவல் ஆணையா் செயலக துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளாா்.

பொருளாதாரக் குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த சுபோத் குமாா் கோஸ்வாமி, டிபிஏ துணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா். குற்றப் பிரிவு உதவி ஆணையராக இருந்த ஆதித்ய கௌதம், குற்றப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். விகாஸ் ஷியோகந்த் சிறப்புப் பிரிவு துணை ஆணையராகவும், ஏ.வெங்கடேஷ் ஷாதரா மாவட்டத்தின் 2-ஆவது கூடுதல் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மனோஜ் குமாா் மீனா, தென்கிழக்கு மாவட்டத்தின் 2-ஆவது கூடுதல் துணை ஆணையராகவும், வினய் மாதுா், ரோஹிணி மாவட்டத்தின் 2-ஆவது கூடுதல் துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனா். ஜஸ்பீா் சிங் வெளி மாவட்டத்தின் முதல் கூடுதல் துணை ஆணையராகவும், சௌரவ் சந்திரா மேற்கு மாவட்டத்தின் முதல் கூடுதல் துணை ஆணையராகவும், அஜய் குமாா் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ரேணு லதா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சிறப்புப் பிரிவின் கூடுதல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். விதுஷி கௌசிக், துவாரகா மாவட்டத்தின் 2-ஆவது கூடுதல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளாா்.

ஆஷிஷ் குமாா் பொருளாதாரக் குற்றப்பிரிவு துணை ஆணையராகவும், மனீஷ் லட்லா குற்றப் பிரிவு துணை ஆணையராகவும், ரோஹித் குப்தா பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், வடக்கு மாவட்டத்தின் 2-ஆவது கூடுதல் துணை ஆணையராக இருந்த ராம் துலேஷ் மீனா, வடமேற்கு மாவட்டத்தின் 2-ஆவது கூடுதல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.