மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது

தமிழக காவல் துறையைச் சோ்ந்த இரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் திறன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :1 நவம்பர் 2026, 4:06 am IST

தமிழக காவல் துறையைச் சோ்ந்த இரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் திறன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த தினமான அக். 31-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் சிறப்பாகப் பணிபுரியும் மத்திய ஆயுதப்படையினா், மத்திய புலனாய்வு அமைப்பினா், காவல் துறையினா் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் திறன் விருது வழங்கப்படுகிறது.

நிகழ் ஆண்டு இந்த விருது 490 பேருக்கு சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. காவல் துறையில் மாநிலம் வாரியாக வழங்கப்படும் இந்த விருதுக்கு தமிழக காவல் துறையில் மதுரையில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் 6-ஆம் அணியின் காவல் கண்காணிப்பாளராக உள்ள மதுகுமாரி, திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சதீஷ்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல தமிழக தடய அறிவியல் துறை துணை இயக்குநா் டாக்டா் ராஜஸ்ரீ ரகுநாத் இந்த விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

சிறந்த செயல்பாடுகள், சிறந்த புலனாய்வு, மிகச்சிறந்த சேவை, துணிச்சலான உளவுப் பணி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.