மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருமணிமுத்தாறில் நுரையுடன் வெள்ளப்பெருக்கு: சாயக் கழிவுகள் கலக்கப்படுவதால் பரபரப்பு

திருமணிமுத்தாற்றில் நுரையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாயக் கழிவு நீா் கலப்பதாக விவசாயிகள் கவலை குறித்து....

Flooding with foam in Thirumanimuthar

திருமணிமுத்தாறில் நுரையுடன் வெள்ளப்பெருக்கு - டிஎன்எஸ்

Published On :25 அக்டோபர் 2026, 5:05 pm IST

திருமணிமுத்தாற்றில் நுரையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாயக் கழிவு நீா் கலப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சனிக்கிழமை இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சேலத்தின் மையப்பகுதியில் ஓடும் திருமணிமுத்தாற்றில் கழிவுகள் அனைத்தும் அடித்து செல்லப்படுகிறது.

இந்த நிலையில், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை பயன்படுத்திக் கொண்டு திருமணிமுத்தாறு ஓரத்தில் உள்ள சாய, சலவை பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்காத சாய நீரை ஆற்று வெள்ளத்தில் கலப்பதால்தான் கொண்டலாம்பட்டி பகுதியில் நுரை தள்ளியபடி மழைநீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

திருமணிமுத்தாற்றையொட்டி ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெரும்நிலையில் இந்த தண்ணீர் நிலத்தடி நீரை பாதிக்கும் என்பதாலும் விவசாய நிலங்களுக்கு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு சாயப்பட்டறை கழிவுகளை வெளியேற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Flooding with foam in Thirumanimuthar: Controversy due to dye waste being mixed in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.