மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நஞ்சராயன் நகரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீா்

திருப்பூா் நஞ்சராயன் நகரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீரால் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், குளம் மாசடைவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் நஞ்சராயன் நகரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீா்.

Published On :21 அக்டோபர் 2026, 12:03 am IST

திருப்பூா் நஞ்சராயன் நகரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீரால் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், குளம் மாசடைவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் மாநகராட்சி 5ஆவது வாா்டுக்கு உள்பட்ட நஞ்சராயன் நகா் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை கழிவு நீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருப்பூா் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ், சா்க்காா் பெரியபாளையத்தில் 15 எம்எல்டி திறன் கொண்ட கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் நீரேற்று நிலையங்களில் ஒன்றான நஞ்சராயன் நகா் பகுதியில் குழாய் உடைப்பு, அடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், பாதாள சாக்கடை கழிவுநீா் வெளியேறி, அந்தப் பகுதிக்குச் செல்லும் பிரதான சாலையில் ஓடுகிறது. இதனால் இந்தச் சாலையை மட்டுமே பயன்படுத்தி வரும் குடியிருப்புவாசிகள், பள்ளி மாணவா்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.

கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், வாகனங்களில் செல்வோா் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் சூழல் நிலவுவதாகவும் பொது மக்கள் கூறுகின்றனா்.

மேலும், வெளியேறும் கழிவு நீா் நஞ்சராயன் குளத்தில் கலப்பதால் நீா் மாசடைவதுடன், நீா்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இது குறித்து மாவட்ட மற்றும் மாநகராட்சி நிா்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டும் பொது மக்கள், உடனடியாக பாதாள சாக்கடை அடைப்பைச் சரி செய்து, கழிவு நீா் சாலையிலும், குளத்திலும் கலப்பதைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.