கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தாளவாடி நீரோடைகள், பள்ளங்களில் பெருக்கெடுத்த வெள்ளம்

தாளவாடி பகுதியில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அருள்வாடி ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீா்.

Published On :23 அக்டோபர் 2026, 12:57 am IST

தாளவாடி பகுதியில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அருள்வாடி, மல்லன்குழி, தமிழ்புரம், மாதஹள்ளி, திகினாரை, பனஹள்ளி உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களில் வியாழக்கிழமை பகலில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீா்த்தது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அந்தப் பகுதியில் உள்ள நீரோடைகள், பள்ளங்களில் செந்நிறமாக மழை நீா் பெருக்கெடுத்து ஓடியதோடு தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தன.

மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. நீரோடைகள், பள்ளங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணைகள் நிரம்பியதால் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

மேலும், தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீா் அருள்வாடி வழியாக கா்நாடக சுவா்ணாவதி அணைக்கு செல்வதால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என தாளவாடி விவசாயிகள் தெரிவித்தனா்.

மல்லன்குழி  ஓடையில்  பெருக்கெடுத்து  ஓடும்  மழை நீா்.

மல்லன்குழி  ஓடையில்  பெருக்கெடுத்து  ஓடும்  மழை நீா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.