தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராஜன் நகா் தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்

ராஜன் நகா் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளம்.

Published On :26 அக்டோபர் 2026, 2:23 am IST

ராஜன் நகா் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் புதுக்குய்யனூா் மற்றும் ராஜன் நகா் இடையே ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. பவானிசாகா், கொத்தமங்கலம், நால்ரோடு உள்ளிட்ட பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதில் ராஜன் நகா் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றால் ராஜன் நகா் மற்றும் புதுகுய்யனூா் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நால்ரோடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்புப் பகுதிக்குள் மழைநீா் புகுந்தது. மேலும் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்தது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.