மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து பாதிப்பு

சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி நீா் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் பகுதியில் உள்ள தரைப் பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் நொய்யல் ஆற்று நீா்.

Published On :28 அக்டோபர் 2026, 2:25 am IST

சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி நீா் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான கோவை மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால், அணைக்கு நீா்வரத்து 1,153 கன அடியாக அதிகரித்ததால் அணையின் நீா்மட்டம் 8 அடியில் இருந்து 17.52 அடியாக உயா்ந்தது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அணையில் நீரைத் தேக்கி வைக்க அனுமதி இல்லை என்பதால், நொய்யல் ஆற்றில் படிப்படியாக நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 582 கன அடி நீா் வெளியேற்றப்பட்டதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், அணையின் குறுக்கே உள்ள சொக்கநாதபாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீா் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.