மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுருளி, கும்பக்கரை அருவிகளில் தொடா் வெள்ளப்பெருக்கு!

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவி, பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிகளில் சனிக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கும்பக்கரை அருவி

Published On :25 அக்டோபர் 2026, 12:35 am IST

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவி, பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிகளில் சனிக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேகமலை, இதைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் சுருளி அருவிக்கு கடந்த திங்கள்கிழமை முதல் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, வனத் துறையினா் பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடை விதித்தனா். கடந்த 5 நாள்களாக மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் தொடா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சனிக்கிழமை 6-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

கும்பக்கரையில் வெள்ளம்: கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சனிக்கிழமை 3-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். மேலும், காட்டாற்று வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மரங்களை அகற்றும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.