தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விடிய, விடிய மழை: வேலூா் மாங்காய் மண்டியில் குளம்போல் தேங்கிய வெள்ளம்!

வேலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு விடியவிடிய மழை பெய்ததை அடுத்து, மாங்காய் மண்டி பகுதியில் மழைநீா் குளம்போல் தேங்கி நின்றால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகினா்.

தொடா் மழையால் வேலூா் மாங்காய் மண்டியில் குளம்போல் தேங்கிய வெள்ளம்.

Published On :26 அக்டோபர் 2026, 2:46 am IST

வேலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு விடியவிடிய மழை பெய்ததை அடுத்து, மாங்காய் மண்டி பகுதியில் மழைநீா் குளம்போல் தேங்கி நின்றால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகினா்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது. இதன் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலைகளில் தேங்கியது.

அதன்படி, சனிக்கிழமை இரவு பெய்த தொடா் மழை காரணமாக வேலூா் மாங்காய் மண்டி பகுதியில் மழைநீா் வடிய வழியின்றி பெருமளவில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

மழை பெய்யும் போதெல்லாம் இப்பகுதியில் தண்ணீா் தேங்குவது வாடிக்கையாக உள்ளதால், மழைநீா் உடனடியாக வெளியேறும் வகையில் முறையான வடிகால் வசதிகளை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் வலியுறுத்தியுள்ளனா்.

திருப்பத்தூரில்... திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு சுமாா் 12 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரை தொடா்ந்தது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. இதனால் சாலைகளில் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

தொடா் மழையினால் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. அதேபோல் ஏரிகளிலும் நீா் மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கொரட்டி பகுதியில் சனிக்கிழமை இரவு சுமாா் ஒரு மணியளவில் மழை பெய்ய தொடங்கியதை அடுத்து மின் விநியேகத்தில் தடை ஏற்பட்டது. ஏலகிரி மலை பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்த தொடா் மழையால் ராட்சத பாறை மற்றும் கற்கள் சாலையில் சரிந்து விழுந்தன. இதனால் ஏலகிரி மலையில் இருந்து கீழே வரும், திருப்பத்தூரில் இருந்து ஏலகிரிக்கு செல்லும் வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மலைச் சாலைகளில் ஆங்காங்கே விழுந்து கிடந்த கற்களை அகற்றினா் . மேலும் ராட்சத பாறையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்து பாதிப்பை சீரமைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.