தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இரவு முதல் விடிய விடிய மழை பெய்யும்! தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு!

சென்னை உள்பட தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று இரவு தொடங்கி விடிய விடிய தொடர் மழை பெய்யும்...

தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து... - எக்ஸ்

Published On :20 அக்டோபர் 2026, 7:38 pm IST

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் இன்று இரவு தொடங்கி விடிய விடிய தொடர் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதன்மேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எகஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''20.10.2026 முதல் 21.10.2026 காலை வரையிலான முன்னறிவிப்பு - இன்று இரவு முதல் நாளை காலை வரை கடலோரப் பகுதிகளுக்கு இது ஒரு சிறந்த நாளாக இருக்கும். சென்னையும் அதிக பாதிப்புள்ள மண்டலத்தில் உள்ளது.

இந்தியப் பெருங்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழகக் கடலோர மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. இது உள்நாட்டைக் கடந்து கேரளம் வழியாக அரபிக்கடலை நோக்கி நகரும். அதன் தொடர்ச்சியாக, தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று பகல் வேளையில் வெய்யிலாக இருந்தபோதும் இரவில் குறிப்பிட்ட இடங்களில் தீவிரமாக மழை பெய்யும். மாலை முதல் இரவு வரை படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து அதிகாலை வரை மழை தொடரும்.

டெல்டா, பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம் கடலோரப் பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை கடலோரப் பகுதிகள் ஹாட்ஸ்பாட்டாக இருப்பதால் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்யும்.

இது தவிர தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள் மாவட்டப் பகுதிகள், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'' உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், ''அண்ணா நகர்-கோயம்பேடு பகுதியில் நல்ல வானிலை தொடங்குகிறதா? நகரில் வேறு எங்கும் மழை தொடங்கியுள்ளதா?

இரவு முதல் காலை வரை, மழையின் தீவிரம் அதிகரித்து, நகரின் அனைத்துப் பகுதிகளையும் சூழ்ந்துகொள்ளும்.'' எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Rain will fall from night to dawn Chennai hotspot Tamil Nadu Weatherman report

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.