கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘ஹாட்ஸ்பாட்’ சென்னை! இன்று மாலை முதல் வேகமெடுக்கும் மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் பதிவு...

rain

மழை - Photo | X

Published On :20 அக்டோபர் 2026, 3:00 pm IST

சென்னையில் இன்று மாலை முதல் மழையின் வேகம் அதிகரித்து, நாளை காலை வரை பெய்யும் என்று தமிழ்நாடு அரசின் எல்-நினோ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில், நாளை காலை வரையிலான மழை நிலவரம் பற்றி பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”இன்று (அக். 20) முதல் நாளை (அக். 21) காலை வரை கடலோரப் பகுதிகளுக்கு சிறந்த நாளாக இருக்கும். சென்னையும் அதிக மழை பெய்யும் ஹாட்ஸ்பாட் இடமாக உள்ளது.

இலங்கைக்கு அருகில் உள்ள மேல் வளிமண்டல காற்றழுத்த மண்டலம், தமிழகக் கடலோர மற்றும் அருகிலுள்ள மாவட்டங்கள் நோக்கி குவிந்து வருகின்றன. இது கரையைக் கடந்து, கேரளம் வழியாக அரபிக்கடலுக்கு நகரும். அதன் பிறகு, தென் தமிழகத்தில் மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இன்று முதல், பகல் நேரங்களில் திடீர், குறுகிய மற்றும் தீவிரமான மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். இடையிடையே வெய்யில் இருக்கும். இன்று மாலை முதல் இரவு வரை மழையின் தீவிரம் அதிகரித்து, அதிகாலை வரை தொடர வாய்ப்புள்ளது.

டெல்டா, புதுச்சேரி, கடலூர் விழுப்புரம் கடற்கரைப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும். ராமநாதபுரம் கடலோரப் பகுதிகள், புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளும் இன்று இரவு முதல் நாளை காலை வரை அதிக மழை பெய்யும் மண்டலத்தில் இருக்கும்.

கடலோர மாவட்டங்களான தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்பகுதிகள், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

'Hotspot' Chennai! Rain to intensify from this evening!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.