கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை, 18 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு!

இரவு 7 மணிவரை 19 மாவட்டங்களில் மழை நிலவரம் பற்றி...

Rain likely in Chennai and 18 districts until 7 PM!

மழை - படம்: தினமணி

Published On :1 நவம்பர் 2026, 5:24 pm IST

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து 'முரசு' புயலாக உருவெடுத்துள்ளது. இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணிக்கு, முரசு புயலாக வலுவடைந்துள்ளது. இது நாளை (நவ. 2) மேற்கு - மத்திய வங்கக் கடலில் தீவிர புயலாக மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயலானது, நவ. 3 ஆம் தேதி காலை வாக்கில், நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது

இதனிடையே புயல் மற்றும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Meteorological Centre has stated that there is a likelihood of rain until 7 PM in 19 districts of Tamil Nadu, including Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.