டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பெருந்துறையில் நவ. 3-இல் முதல்வர் விஜய் சாலை வலம்?

பெருந்துறையில் முதல்வர் விஜய் சாலை வலம் செல்வது குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் சாலை வலம் - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 4:03 pm IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமையில் (நவ. 3) சாலை வலம் செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (நவ. 2) நடைபெறும் புதிய பேருந்து நிலையத் திறப்பு விழா உள்பட அரசு நலத்திட்ட விழாக்களில் முதல்வர் விஜய் கலந்து கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் செல்கிறார். அங்கிருந்து விராலிமலை தொகுதி தேசிய நெடுஞ்சாலை வழியாக மாத்தூர், மண்டையூர், கீரனூர் வழியாக புதுக்கோட்டை வரையில் சாலை வலம் செல்கிறார்.

இந்த நிலையில், புதன்கிழமையில் (நவ. 3) ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும் முதல்வர் விஜய் சாலை வலம் செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவ. 3-ல் கோவை விமான நிலையம் செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து செங்கப்பள்ளியில் இருந்து வாய்க்கால்மேடு வரை சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு ஈரோடு வரையில் சாலை வலம் செல்லவிருக்கிறார். மேலும், பெருந்துறையில் முதல்வரின் சாலை வலத்துக்காக சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்படுவதுடன், சுமார் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜய் நவ. 2-ல் செல்லும் விராலிமலை மற்றும் நவ. 3-ல் செல்லும் பெருந்துறை ஆகிய இரு தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

CM Vijay plans to hold a roadshow in Perundurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.