பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் சாலை வலம் செல்ல திட்டம்?

புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் சாலை வலம் செல்வது குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் சாலை வலம் - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 4:04 pm IST

புதுக்கோட்டையில் நாளை (நவ. 2) முதல்வர் விஜய் சாலை வலம் செல்ல திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமையில் (நவ. 2) தேதியில் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்து, அரசு நலத்திட்ட விழாக்களிலும் முதல்வர் விஜய் கலந்து கொள்ளவிருக்கிறார்.

முதல்வரான பிறகு முதல் முறையாக புதுக்கோட்டைக்கு முதல்வா் விஜய் வருகை தருகிறாா்.

சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதுக்கோட்டை விராலிமலை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவிருப்பதால், முதல்வரின் பயணத் திட்டத்தில் மாற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது விராலிமலை தொகுதி தேசிய நெடுஞ்சாலை வழியாக மாத்தூர், மண்டையூர், கீரனூர் வழியாக புதுக்கோட்டை செல்கிறார். மேலும், 20 கி.மீ. தொலைவுக்கு முதல்வர் விஜய் சாலை வலம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

CM Vijay plans to hold a roadshow in Pudukkottai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.