பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வர் விஜய் இன்று புதுகை வருகை!

முதல்வா் விஜய் இன்று புதுக்கோட்டைக்கு வருகை...

vijay

முதல்வர் விஜய் - ANI

Published On :2 நவம்பர் 2026, 3:48 am IST

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம், நவீன உள் விளையாட்டரங்கம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்வா் ஜோசப் விஜய் திங்கள்கிழமை இங்கு வருகிறாா்.

புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் நடைபெறும் அரசு விழாவில், ரூ. 24.5 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட நவீன உள்விளையாட்டு அரங்கம் உள்பட மாவட்டத்தில் நிறைவடைந்த திட்டப் பணிகளை முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா். மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்க உள்ளாா்.

இதற்காக சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து சாலை வழியாக புதுக்கோட்டை வரும் முதல்வா் ஜோசப் விஜய்யை வரவேற்க, மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தலைமையில் அக்கட்சியினா் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனா்.

திருச்சி- புதுக்கோட்டை சாலையில் மாத்தூா், மண்டையூா், கீரனூா் ஆகிய பகுதிகளிலும் கட்சியினா் உற்சாக வரவேற்பளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கட்சியினா் தெரிவித்தனா்.

விழா நடைபெறும் அரங்கில் சுமாா் 3 ஆயிரம் போ் பங்கேற்கும் வகையில், பயனாளிகள் மற்றும் கட்சியினருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.