தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விமான கண்காட்சி: லக்னௌவிற்குத் திருப்பி விடப்பட்ட 2 இண்டிகோ விமானங்கள்!

வாரணாசி சென்றடைய வேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்கள் லக்னௌவிற்கு திருப்பி விடப்பட்டது பற்றி...

Two Varanasi-bound IndiGo flights diverted to Lucknow due to air show

இண்டிகோ - ANI

Published On :25 அக்டோபர் 2026, 1:18 pm IST

வாரணாசி சென்றடைய வேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்கள் விமான காட்சி காரணமாக லக்னௌவிற்கு திருப்பி விடப்பட்டன.

இதன்படி தலைநகர் தில்லி மற்றும் ஹைதராபாத்திலிருந்து வாரணாசி சென்ற விமானங்கள் இரண்டும் திருப்பி விடப்பட்டுள்ளதாக சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியிலிருந்து வந்த விமானம் காலை 10.14 மணிக்கும், ஹைதராபாத்திலிருந்து வந்த விமானம் காலை 10.19 மணிக்கும் லக்னௌவில் தரையிறங்கின. இரண்டு விமானங்களும் லக்னௌ விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படையின் 94ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் இந்திய விமானப் படை தின விமான காட்சி-2026 நடத்தப்பட்டு வருகிறது. மூன்று நாள்கள் நடைபெறவிருந்த இந்த விமான காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

இருப்பினும், மாநிலத்தில் நடைபெற்ற சட்டமேலவைத் தேர்தல் காரணமாக வெள்ளிக்கிழமை எந்தக் காட்சியும் நடைபெறவில்லை.

Summary

Two IndiGo flights scheduled to arrive at Varanasi on Sunday were diverted to Lucknow due to the air show in Varanasi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.