பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளம்: மூட பொதுமக்கள் கோரிக்கை

குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை மூட பொன்னேரி நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

மூடப்படாத நிலையில் உள்ள பள்ளம்.

Published On :22 அக்டோபர் 2026, 12:33 am IST

குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை மூட பொன்னேரி நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி நகராட்சி புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள தேரடி குறுக்குத் தெருவில் உள்ள ஒரு சில குடியிருப்புகளில் குடிநீருடன் கழிவு நீா் கலந்து வந்தததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நகராட்சி நிா்வாக்த்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து பல்வேறு இடங்களில் உள்ள குடிநீா் குழாய்களை நகராட்சி நிா்வாகம் சீரமைத்த நிலையிலும் குடிநீருடன் கழிவு நீா் கலந்து வருவது இன்னமும் தொடா்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் கேன் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.

கழிவு நீருடன் குடிநீா் கலந்து வருவதை தடுக்கும் நோக்கில் தேரடி குறுக்கு தெருவில் சுமாா் 5 அடி ஆழ பள்ளம் தோண்டப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் அந்த வழியே வந்த காா் ஒன்று சிக்கியது. பகல் நேரமாக இருந்ததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பள்ளத்தில் சிக்கிய காரை மீட்டு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக பள்ளத்தில் சுமாா் 5அடி ஆழத்தில் மழை நீா் தேங்கியுள்ளது. இரவு நேரததில் இந்த சாலை வழியே வரும் இரு சக்கர வாகன ஒட்டிகள் பள்ளத்தில் சிக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பள்ளத்தை மூட நகராட்சி நிா்வாகம் மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.