திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு: போலீசார் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை?

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் போலீசார் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகத் தகவல்

News image

ஆகாஷ் மரண வழக்கில் போலீசார் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை - பிரதிப் படம்

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

மானாமதுரை ஆகாஷ் கொலை வழக்கில் போலீசார் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் என்பவர், கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கடந்த மார்ச் 6-ல் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இரு நாள்களிலேயே அவர் தப்ப முயன்றபோது காலில் காயம் ஏற்பட்டு மார்ச் 8-ல் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஆகாஷின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கின் தீவிரம் கருதி சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்பட்டது.

மேலும், ஆகாஷின் உடலை அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்பேரில், மதுரை தத்தனேரி மயானத்தில் மாவட்ட நிர்வாகத்தால் ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட தீண்டாமை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆகாஷின் வழக்கு வந்த நிலையில், சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ந்ததால், வழக்கு சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு சிபிசிஐடி மனு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து, ஆகாஷ் வழக்கை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

மேலும், சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, ஆகாஷ் வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசார் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் சிபிசிஐடி திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Reports indicate that the police have filed a charge sheet against 6 individuals in the case concerning the death of Akash

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.