தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரலை தொடரும் என அமைச்சர் ராஜ்மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களை தவெக எம்எல்ஏ விஜய் தாமு அடிக்க முற்பட்டதாகக் கூறப்படுவது தவறு என்றும் தெரிவித்தார்.
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 18 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 2-ம் நாளாக நேற்று (ஜூன் 19) பேரவை நேரலை செய்யப்பட்டபோது திடீரென நிறுத்தப்பட்டது. எதிர்க்கட்சியினர் இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வருவதுடன் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராஜ்மோகன்,
"கடந்த ஆட்சியில் பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படாமல் சட்டப்பேரவை இருட்டடிப்பு செய்யப்பட்டது என்று நான்தான் கூறினேன். இப்போதும் நான்தான் கூறுகிறேன். பேரவை நடவடிக்கைகள் நேரலை சென்றுகொண்டிருக்கிற நம்பிக்கையில்தான் நானும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். இடையில் வெளியில் வரும்போதுதான் நேரலை போகவில்லை என்று சொன்னார்கள். உடனடியாக நானும் சென்று விசாரித்தேன்.
ஜனநாயகத்தில் இதுபோன்ற சட்டபேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. சம்மந்தப்பட்ட துறை, அதிகாரிகளுடன் பேசியிருக்கிறேன். இனி வரும் நாள்களில் நேரலை தொடரும்" என்றார்.
Summary
TN assembly proceedings will be live for coming days: Rajmohan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

என்னைப் போன்ற Slow Learner குழந்தைகள்! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


