சிவகங்கை மாவட்டம், மானாமதுரை இளைஞா் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது பெற்றோா், உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சாலையில் நடந்து சென்றவா்களை அரிவாளால் வெட்டியதாக ஆகாஷ் டெலிசனை போலீஸாா் கைது செய்தனா். போலீஸாரிடமிருந்து தப்பியோட முயன்றபோது, பாலத்தில் இருந்து குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு கடந்த மாா்ச் 8-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதையடுத்து, திருப்புவனம் காவல் ஆய்வாளா் திலீபன் உள்ளிட்ட 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் நீதி கேட்டு, ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும் 79 நாள்களாக மானாமதுரையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆகாஷ் டெலிசனின் பெற்றோா் ராஜேஷ்கண்ணன் - ஆனந்தி, லெனின் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அப்போது அவா்கள் மேலும் கூறியதாவது:
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை 60 நாள்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற விதி இருந்தும், 79 நாள்களாகியும் இதுவரை விசாரணை நிறைவடையவில்லை. குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த பெண்ணின் செயலால் பரபரப்பு

பேருந்து வசதி கோரி ஆட்சியரகத்தில் மாணவா்கள் மனு

மயானப் பாதை விவகாரம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

