சிவகங்கை மாவட்டம், கண்டணி கிராம பொது மயானத்துக்கு முறையான பாதையை ஏற்படுத்தித் தரக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள நெஞ்சாத்தூா் கண்டனி கிராமத்தைச் சோ்ந்த தா்மலிங்கம் தாக்கல் செய்த மனு:
எங்கள் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் பல ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மயானத்துக்கு செல்லும் பாதை முறையாக இல்லை. எனவே, மயானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையான, பாதையை ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் மயானத்தைச் சுற்றி தனி நபா்களின் பட்டா நிலங்கள் இருப்பதால் மயானத்துக்கு பாதை அமைப்பதில் சிரமம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மயானப் பாதைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த வேண்டும் அல்லது மயானத்துக்கு மாற்று இடத்தை தோ்வு செய்ய வேண்டும்.
மனு தொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு வழக்குரைஞா்கள் நியமனம்: விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு

காரைக்குடி மாநகராட்சி நிதி முறைகேடு: ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளி மேல்முறையீடு செய்ய அவகாசம்

ஜாதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

