மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: அபார வெற்றி கண்டது இந்தியா!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரவுண்ட் ராபின் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 8-0 கோல் கணக்கில் தென் கொரியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

X | Hockey India

Published On :3 நவம்பர் 2026, 1:40 am IST

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரவுண்ட் ராபின் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 8-0 கோல் கணக்கில் தென் கொரியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் கோல் கணக்கை தில்பிரீத் சிங் 8-ஆவது நிமிஷத்தில் தொடக்கி வைத்தாா். 11-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஜக்ராஜ் சிங் அதை 2-ஆக உயா்த்த, 15-ஆவது நிமிஷத்தில் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங்கும் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பை கோல் ஆக மாற்றினாா்.

தென் கொரியா தடுமாறிய நிலையில் இருக்க, முதல் பாதி ஆட்டத்தை இந்தியா 3-0 கோல் கணக்கில் நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியிலும் இந்தியாவின் ஆதிக்கம் நீடித்தது. 33-ஆவது நிமிஷத்தில் அணிக்குக் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஷிலானந்த் லக்ரா கோல் அடித்தாா்.

தொடா்ந்து, சுக்ஜீத் சிங் அதே 33-ஆவது நிமிஷத்திலும், சஞ்சய் ராணா 36-ஆவது நிமிஷத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனா். தென் கொரியாவுக்குக் கிடைத்த அனைத்து பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகளும் முறியடிக்கப்பட, முற்றிலுமாக ஸ்தம்பித்தது அந்த அணி.

இந்நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிஷத்தில் (60’) அங்கத் வீா் பாஜ்வா இந்தியாவின் கோல் கணக்கை முடித்து வைக்க, முடிவில் இந்தியா 8-0 கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

போட்டியில் ரவுண்ட் ராபின் சுற்று முடிவடைந்த நிலையில், இந்தக் கட்டத்தில் அனைத்து ஆட்டங்களிலும் வென்ற ஒரே அணியாக இந்தியா 15 புள்ளிகளோடு முதலிடத்துடன் நிறைவு செய்தது. ஜப்பான் (10), மலேசியா (9), தென் கொரியா (6) முறையே அடுத்த 3 இடங்களைப் பிடித்தன. அடுத்து அவை நான்கும் அரையிறுதியில் மோதுகின்றன.

போட்டியில் ஒரு வெற்றியைக் கூட பெறாத சீனா, வங்கதேசம் வெளியேறின. அரையிறுதியில், இந்தியா - தென் கொரியாவையும், ஜப்பான் - மலேசியாவையும் புதன்கிழமை (நவ. 4) சந்திக்கின்றன.

இதர ஆட்டங்கள்: இதனிடையே, திங்கள்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில், ஜப்பான் 2-1 கோல் கணக்கில் மலேசியாவை வெல்ல, சீனா - வங்கதேசம் மோதல் 1-1 என டிராவில் முடிந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.