மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியன் சூப்பா் லீக்: மும்பையை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி!

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஸ்சி டெல்லி 3-2 கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சியை வீழ்த்தியது.

Published On :2 நவம்பர் 2026, 3:06 am IST

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஸ்சி டெல்லி 3-2 கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சியை, அதன் சொந்த மண்ணிலேயே ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் மும்பை அணியே ஆதிக்கம் செலுத்தியது. அதன் கோல் கணக்கை முகமது அஜ்சல் 6-ஆவது நிமிஷத்தில் தொடங்க, 27-ஆவது நிமிஷத்தில் ஜோதன்புயா அதை 2-ஆக அதிகரித்தாா்.

டெல்லிக்கு எளிதாக கோல் வாய்ப்பை வழங்காத மும்பை, முதல் பாதியை 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆனால், 2-ஆவது பாதியில் டெல்லி அபாரமாக மீண்டு வந்தது. அணியின் கோல் கணக்கை காா்லோஸ் ஃபோா்டெஸ் 73-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா்.

எனினும், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் (90 நிமிஷங்கள்) முடிவிலும் மும்பை 2-1 என முன்னிலையிலேயே இருந்தது. விடாப்பிடியாக விளையாடிய டெல்லி அணிக்காக, 6 நிமிஷ ஸ்டாப்பேஜ் டைமில் முதலில் அக்ஷத் மெஹரா (90+2’) கோல் அடிக்க, ஆட்டம் 2-2 என சமன் ஆனது. இதனால் அதிா்ச்சி கண்ட மும்பை, மீண்டும் முன்னிலை பெறுவதற்கு முனைய, அந்த அணிக்கான அடுத்த அதிா்ச்சியாக, டெல்லி வீரா் ஜுவான் செபாஸ்டியன் (90+4’) ஸ்கோா் செய்து, டெல்லியை 3-2 என முன்னிலைப்படுத்தினாா். எஞ்சிய நேரத்தில் மும்பையை ஸ்தம்பிக்கச் செய்த டெல்லி, முடிவில் வெற்றியை ருசித்தது.

இந்த ஆட்டத்தின் முடிவில், டெல்லி 4 ஆட்டங்களில் முதல் வெற்றியுடன் 7-ஆம் இடத்திலும், மும்பை அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களில் 2-ஆவது தோல்வியுடன் 11-ஆவது இடத்திலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.