மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டிஃபென்டர் ஹகிமியின் ஹாட்ரிக் கோல், 2 அசிஸ்ட்..! அபார வெற்றியில் பிஎஸ்ஜி!

லீக் 1 கால்பந்துத் தொடரில் அபார வெற்றியைப் பெற்ற நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி குறித்து...

Hakimi's poster

ஹகிமியின் போஸ்டர் - படங்கள்: எக்ஸ் / பிஎஸ்ஜி

Published On :31 அக்டோபர் 2026, 1:31 pm IST

பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்துத் தொடரில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. ஹகிமி முதல்முறையாக ஹாட்ரிக் கோல் அடித்தார்.

இந்த வெற்றியுடன் பிஎஸ்ஜி அணி 20 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளது. லில்லி அணி 18 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறது.

லீ ஹாவ்ரே தனது சொந்த மண்ணில் பிஎஸ்ஜி உடன் நேற்றிரவு மோதியது. இந்தப் போட்டியில் தொடக்கத்தில் லீ ஹாவ்ரே 18ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-0 என முன்னிலை வகித்தது.

அடுத்ததாக பிஎஸ்ஜி அணியின் சார்பில் மிகா கோட்ஸ் 26ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தப்பட்டது.

அடுத்ததாக பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர டிஃபென்டர் அச்ரஃப் ஹகிமி முதல்முறையாக தனது ஹாட்ரிக் கோல் (28, 55, 69ஆவது நிமிஷங்களில்) அடித்து அசத்தினார். இத்துடன் 62ஆவது நிமிஷத்தில் மயுலு கோல் அடித்து அபார வெற்றிக்கும் உதவினார்.

இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணி 71 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தார்கள். 19ஆவது நிமிஷத்துக்குப் பிறகு தங்களது முழுமையான ஆதிக்கத்தைக் கொண்டு வந்தார்கள்.

இந்தப் போட்டியில் அகிமி மூன்று கோல்கள், 2 அசிஸ்ட் செய்து மிரட்டினார். நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி அணி தொடர்ச்சியாக 6 வெற்றிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்கள்.

Summary

Ligue 1: Achraf Hakimi hat trick leads PSG's rout over Le Havre

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.