
பார்சிலோனாவுக்கு முதல் தோல்வி..! பிஎஸ்ஜி அபார வெற்றி!
சாம்பியன்ஸ் லீக்கில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி உடன் தோல்வியுற்ற பார்சிலோனா குறித்து...

கோல் அடித்த மகிழ்ச்சியில் பிஎஸ்ஜி அணியினர், சோகத்தில் லமின் யமால். - படங்கள்: ஏபி
சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனா கால்பந்து அணி பிஎஸ்ஜி உடன் 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. நடப்பு சீசனில் பார்சிலோனாவுக்கு இது முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸில் பல்வேறு குழப்பங்களுக்கு இடையே பிஎஸ்ஜி அணி தனது சொந்த மண்ணில் பார்சிலோனாவை எதிர்த்து விளையாடியது. ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் வந்து பார்த்தார்கள்.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது. இதில் டிசையர் டோவோ 38ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து, முதல் பாதியில் பிஎஸ்ஜி அணியை 1-0 என முன்னிலைப் பெற வைத்தார்.
இரண்டாம் பாதியில் ஸவி எக்ஸ்பார்ட் 55ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார். அடுத்ததாக 72ஆவது நிமிஷத்தில் லூகஸ் எர்னான்டஸ் கோல் அடித்து 2-1 என பிஎஸ்ஜியை முன்னிலைப் பெற வைத்தார்.
லமின் யமால் தனியாளாக பந்தைக் கடத்திச் சென்று, சிறப்பான கோல் அடித்து பார்சிலோனாவை 2-2 என சமன்படுத்தினார். உடனடியாக பிஎஸ்ஜி பக்கம் இருந்து 81, 86ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 4-2 என முன்னிலைப் பெற்றனர்.
இறுதியில் 4-2 என பிஎஸ்ஜி வென்றது. இந்தப் போட்டியில் 54 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த பார்சிலோனா அணியினால் கோல் அடிக்க முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்த சீசனில் பார்சிலோனா முதல்முறையாக தோல்வியுற்றுள்ளது. சாம்பியன்ஸ் லீக்கில் பிஎஸ்ஜி ஹாட்ரிக் கோப்பை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.
Summary
First defeat for Barcelona..! PSG's huge win!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







