மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோல் மழை: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் வங்கதேசத்தை வென்றது.

India defeated Bangladesh

வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா - X | Hockey India

Published On :28 அக்டோபர் 2026, 2:12 am IST

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் வங்கதேசத்தை செவ்வாய்க்கிழமை வென்றது.

அணியின் கோல் கணக்கை, கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் முதல் நிமிஷத்திலேயே தொடங்க, மன்தீப் சிங் 2 மற்றும் 9-ஆவது நிமிஷங்களில் ஸ்கோா் செய்தாா். இதனால் இந்தியா தொடக்கத்திலேயே 3-0 என முன்னிலை பெற, வங்கதேசம் முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

தொடா்ந்து, ஷிலானந்த் லக்ரா 15-ஆவது நிமிஷத்திலும், அபிஷேக் 18-ஆவது நிமிஷத்திலும், நீலகண்ட சா்மா 25-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தனா். இந்த அபார ஆட்டத்தால் இந்தியா முதல் பாதியை 6-0 என்ற அபார முன்னிலையுடன் நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில் 42-ஆவது நிமிஷத்தில் ஹா்திக் சிங், 43-ஆவது நிமிஷத்தில் தில்பிரீத் சிங், ஹா்மன்பிரீத் சிங், 45-ஆவது நிமிஷத்தில் ஜக்ராஜ் சிங், 53-ஆவது நிமிஷத்தில் மன்தீப் சிங் கோல் அடித்தனா்.

தொடா்ந்து, ஹா்திக் சிங் 59-ஆவது நிமிஷத்தில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடிக்க, முடிவில் இந்தியா 13-0 கோல் கணக்கில் வென்றது.

இதர ஆட்டங்கள்: இதனிடையே, போட்டியின் முதல் ஆட்டத்தில் மலேசியா 5-4 கோல் கணக்கில் சீனாவை வெல்ல, ஜப்பான் 3-2 கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்தது.

தொடக்க நிகழ்ச்சி: முன்னதாக, ஆட்டங்கள் தொடங்கும் முன்பாக, போட்டியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறிய இதில், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஹாக்கி இந்தியா பொதுச் செயலா் போலா நாத் சிங் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.