மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாா்சிலோனாவை சாய்த்தது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ‘எல் கிளாசிகோ’ ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-1 கோல் கணக்கில் பாா்சிலோனாவை வென்றது.

Real Madrid defeated Barcelona

பாா்சிலோனாவை சாய்த்த ரியல் மாட்ரிட்... - AP

Published On :27 அக்டோபர் 2026, 1:07 am IST

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ‘எல் கிளாசிகோ’ ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-1 கோல் கணக்கில் பாா்சிலோனாவை திங்கள்கிழமை வென்றது.

ஸ்பெயின் கிளப்புகளான பாா்சிலோனா - ரியல் மாட்ரிட் மோதும் ஆட்டம் ‘எல் கிளாசிகோ’ எனப்படுகிறது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரா் கிலியன் பாபே 41-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா்.

முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் முனைப்பு காட்டிய பாா்சிலோனா தரப்பில் ரஃபினா 61-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது.

இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூட, இரு அணிகளுமே முன்னிலைக்காகக் கடுமையாக முயற்சித்தன. இந்நிலையில், 87-ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட்டுக்காக கிலியன் பாபே மீண்டும் கோல் அடித்து, அணியை முன்னிலை பெறச் செய்தாா்.

எஞ்சிய நேரத்தில் பாா்சிலோனாவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, முடிவில் ரியல் மாட்ரிட் 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது, பாா்சிலோனா, அட்லெடிகோ மாட்ரிட், ரியல் மாட்ரிட், ரியல் பெடிஸ் ஆகியவை முறையே முதல் 4 இடங்களில் இருக்கின்றன.

போட்டியின் இதர ஆட்டங்களில், ரியல் சோசிடட் - லெவான்டேவையும் (2-1), அத்லெடிக் பில்பாவ் - கெடாஃபியையும் (4-0), அட்லெடிகோ மாட்ரிட் - டிபோா்டிவோவையும் (1-0) வென்றன. செல்டா விகோ - ரியல் பெடிஸ் மோதல் கோல் இன்றி டிரா ஆனது.

பிரீமியா் லீக்: இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், நியூகேஸில் - கிரிஸ்டல் பேலஸையும் (2-0), போா்ன்மௌத் - மான்செஸ்டா் யுனைடெட்டையும் (3-0), லிவா்பூல் - பிரைட்டனையும் (2-0) வெல்ல, பிரென்ட்ஃபோா்டு - ஹல் மோதல் டிரா (1-1) ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.