மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

த்ரில்லர் படத்தை விஞ்சிய ரியல் மாட்ரிட்..! கடைசி 7 நிமிஷத்தில் 3 கோல்கள்!

சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட் அணி ரோமா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது குறித்து...

Thrilling win for Real Madrid; Rodrygo named Man of the Match

ரியல் மாட்ரிட் அணியின் த்ரில் வெற்றி, ரோட்ரிகோ ஆட்ட நாயகன் விருது - படங்கள்: எக்ஸ் / ரியல் மாட்ரிட்

Published On :15 அக்டோபர் 2026, 4:15 pm IST

சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட் அணி 4-3 என்ற கோல் கணக்கில் ரோமா அணியை கடைசி நிமிஷத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 59ஆவது நிமிஷத்தில் வினிசியஸுக்குப் பதிலாக களமிறங்கிய என்ட்ரிக் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இத்தாலியின் மிகப்பெரிய கால்பந்துத் திடலில் ஒன்றான ஸ்டேடியோ ஒலிம்பிகோ இந்தப் போட்டி நடைபெற்றது. ரோமா (ரோம்) தனது சொந்த மண்ணில் ரியல் மாட்ரிட் உடன் மோதியது.

இந்தப் போட்டியில் 20ஆவது நிமிஷத்தில் ரோமாவின் மார்டின் டி ரூன் கோல் அடிக்க, எம்பாபே 25ஆவது நிமிஷத்தில் சமன் செய்தார். முதல் பாதி 1-1 என முடிவடைந்தது.

இரண்டாம் பாதியில் 51, 57ஆவது நிமிஷங்களில் ரோமாவின் டோனியல் மலேன் கோல் அடித்து 3-1 என முன்னிலைப் பெறச் செய்தார்.

பின்னர், சில மாற்று வீரர்களைக் களமிறக்கியது ரியல் மாட்ரிட். 83, 85, 90ஆவது நிமிஷங்களில் முறையே கார்லோஸ் எஸ்பி, என்ட்ரிக், ரூடிகர் கோல் அடித்தார்கள்.

இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் லீக்கில் அதிக முறை (15) சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது.

Summary

Real Madrid beat roma in final 7 minutes 3 goals, absolute cinema in champions league

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.