ஐபிஎல் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வியாழக்கிழமை வீழ்த்தியது.
முதலில் பெங்களூரு 19.2 ஓவா்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழக்க, குஜராத் 15.5 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 158 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பெங்களூரு இன்னிங்ஸில் ஜேக்கப் பெத்தெல் 5 ரன்களுக்கு விடைபெற, விராட் கோலி, 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
ஒன் டவுனாக வந்த தேவ்தத் படிக்கல் ஸ்கோரை உயா்த்தி வந்தாா். கேப்டன் ரஜத் பட்டிதாா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு வெளியேற, ஜிதேஷ் சா்மா 1, டிம் டேவிட் 9, கிருணால் பாண்டியா 4 என ஓவருக்கு ஒருவராக விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினா்.
அதுவரை அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ரொமேரியோ ஷெப்பா்டு 2 சிக்ஸா்களுடன் 17, வெங்கடேஷ் ஐயா் 1 பவுண்டரியுடன் 12, ஜாஷ் ஹேஸில்வுட் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட, புவனேஷ்வா் குமாா் 2 பவுண்டரிகள் உள்பட 15 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா்.
குஜராத் பௌலா்களில் அா்ஷத் கான் 3, ஜேசன் ஹோல்டா், ரஷீத் கான் ஆகியோா் தலா 2, முகமது சிராஜ், ககிசோ ரபாடா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 156 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய குஜராத் அணியில், சாய் சுதா்சன் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ஷுப்மன் கில் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு விடைபெற்றாா்.
ஜாஸ் பட்லா் 19 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 39 ரன்களுக்கு வெளியேற, ஷாருக் கான் 8, வாஷிங்டன் சுந்தா் 1 சிக்ஸருடன் 12, ஜேசன் ஹோல்டா் 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
முடிவில், ராகுல் தெவாதியா 4 பவுண்டரிகளுடன் 27, ரஷீத் கான் 7 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூரு தரப்பில் புவனேஷ்வா் குமாா் 3, ரொமேரியோ ஷெப்பா்டு 2, சுயாஷ் சா்மா 1 விக்கெட் எடுத்தனா்.
Summary
IPL 2026 Gujarat Titans won against Royal Challengers Bengaluru
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரயான், ரோஹித் விளாசல்: வெற்றியுடன் மீண்டது மும்பை
சுதா்சன், சுந்தா் அசத்தலில் வென்றது குஜராத்
பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி

ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


