ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிக்கல்டான் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் 55 பந்துகளில் 123 ரன்கள் (10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
நேற்றையப் போட்டியில் 123* ரன்கள் எடுத்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனிநபர் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரராக ரியான் ரிக்கல்டான் மாறினார். முன்னதாக, கடந்த 2008 ஆம் ஆண்டு சிஎஸ்கேவுக்கு எதிராக சனத் ஜெயசூர்யா 114* ரன்கள் எடுத்ததே மும்பை அணிக்காக தனிநபர் குவித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த நிலையில், தற்போது ரியான் ரிக்கல்டான் சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்
ரியான் ரிக்கல்டான் - 123* ரன்கள் - சன்ரைசர்ஸுக்கு எதிராக, 2026
சனத் ஜெயசூர்யா - 114* ரன்கள் - சிஎஸ்கேவுக்கு எதிராக, 2008
குயிண்டன் டி காக் - 112* ரன்கள் - பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக, 2026
ரோஹித் சர்மா - 109* ரன்கள் - கொல்கத்தாவுக்கு எதிராக, 2012
ரோஹித் சர்மா - 105* ரன்கள் - சிஎஸ்கேவுக்கு எதிராக, 2024
Summary
Ryan Rickelton has set the record for scoring the most runs for the Mumbai Indians team in the IPL series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடப்பு ஐபிஎல் சீசன் பாதியிலேயே மும்பை அணியிலிருந்து விலக முடிவெடுத்த ஹார்திக் பாண்டியா?

ஹார்திக் தலைமையில் மட்டும் சொதப்பும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..! என்ன காரணம்?

திலக் வர்மா அரைசதம்; ஆர்சிபிக்கு 167 ரன்கள் இலக்கு!

கடைசி இடத்துக்குக் கீழிறங்காமல் நூலிழையில் தப்பித்த மும்பை இந்தியன்ஸ்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


