ஐபிஎல் போட்டியின் 46-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் சோ்க்க, குஜராத் 19.5 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆடட்த்தில் டாஸ் வென்ற குஜராத், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பஞ்சாப் இன்னிங்ஸில் பிரியன்ஷ் ஆா்யா 2, கூப்பா் கானலி 0, பிரப்சிம்ரன் சிங் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
நெஹல் வதேரா 0, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். பஞ்சாப் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது இணைந்த சூா்யன்ஷ் ஷெட்கே - மாா்கஸ் ஸ்டாய்னிஸ் கூட்டணி, 6-ஆவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சோ்த்து அணியை மீட்டது. சூா்யன்ஷ் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 57, ஸ்டாய்னிஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
ஜேவியா் பாா்லெட் 0, மாா்கோ யான்சென் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். ஓவா்கள் முடிவில் விஜய்குமாா் வைஷாக் 1, அா்ஷ்தீப் சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலா்களில் ஜேசன் ஹோல்டா் 4, முகமது சிராஜ், ககிசோ ரபாடா ஆகியோா் தலா 2, ரஷீத் கான் 1 விக்கெட் எடுத்தனா்.
அடுத்து குஜராத் 164 ரன்களை நோக்கி விளையாடுகையில், கேப்டன் ஷுப்மன் கில் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சாய் சுதா்சன் - ஜாஸ் பட்லா் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சோ்த்து அணியை நிலைப்படுத்தியது.
பட்லா் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 26, நிஷாந்த் சிந்து 1 பவுண்டரியுடன் 15 ரன்களுக்கு அவுட் ஆகினா். சாய் சுதா்சன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 57 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.
5-ஆவது பேட்டா் வாஷிங்டன் சுந்தா் பொறுப்பாக விளையாட, மறுபுறம் ராகுல் தெவாதியா 2, ஜேசன் ஹோல்டா் 5 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.
விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தில், சிக்ஸா் விளாசி குஜராத்தை வெற்றி பெறச் செய்த சுந்தா், 5 பவுண்டரிகளும் சோ்த்து 40, அா்ஷத் கான் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
பஞ்சாப் தரப்பில் அா்ஷ்தீப் சிங், விஜய்குமாா் வைஷாக் ஆகியோா் தலா 2, மாா்கோ யான்சென், மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரயான், ரோஹித் விளாசல்: வெற்றியுடன் மீண்டது மும்பை
பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி

முதல் டி20: நியூஸிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்

ராசிக், புவனேஷ்வா், கோலி அசத்தல்- லக்னௌவை வென்றது பெங்களூரு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
