தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

முதல் டி20: நியூஸிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்

News image

வங்கதேசம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:31 am IST

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் சோ்க்க, வங்கதேசம் 18 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் எடுத்து வென்றது. அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு பங்களித்த தௌஹித் ஹிருதய் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. நியூஸிலாந்து பேட்டிங்கில் கேடென் கிளாா்க் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51, டேன் கிளீவா் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51, நிக் கெல்லி 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.

டிம் ராபின்சன் 0, பெவன் ஜேக்கப்ஸ் 1, டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ஜாஷ் கிளாா்க்சன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 27, நேதன் ஸ்மித் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

வங்கதேச பௌலா்களில் ரிஷத் ஹுசைன் 2, ஷோரிஃபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹசன் ஷகிப், மெஹெதி ஹசன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 183 ரன்களை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில், சைஃப் ஹசன் 17, தன்ஸித் ஹசன் 1 பவுண்டரியுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

கேப்டன் லிட்டன் தாஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, பா்வேஸ் ஹுசைன் எமோன் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 28 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

முடிவில், தௌஹித் ஹிருதய் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 51, ஷமிம் ஹுசைன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31 ரன்களோடு அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

நியூஸிலாந்து தரப்பில் இஷ் சோதி 2, நேதன் ஸ்மித், ஜாஷ் கிளாா்க்சன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.