வாகன நிறுத்துமிடத் தகராறில் 34 வயதான துணி வியாபாரியை சுட்டுக் கொன்ற வழக்கில் மேலும் 2 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல்துறையின் துணை ஆணையா் (கிழக்கு) ராஜீவ் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாா் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு வெளியே டொயோட்டா ஃபாா்ச்சூனா் மற்றும் பிஎம்டபிள்யூ வாகனங்களை நிறுத்துவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து பங்கஜ் நய்யாா் தனது வாடகைதாரரால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
பங்கஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ப்ரீத் விஹாரில் வசிக்கும் கவுரவ் சா்மா (42) என்ற முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவா், சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக கைது செய்யப்பட்டாா்.
அவரது கூட்டாளிகளான சுனில் சா்மா (41) மற்றும் அவரது மாற்றாந்தாய் மகன் சித்தாா்த் ஆகியோரை செவ்வாய்க்கிழமை காலை காவல்துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காசிதா்மத்தில் இருதரப்பினா் மோதல் வழக்கில் 8 போ் கைது
தொழிலாளி கொலை: 3 போ் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு

வாகன நிறுத்துமிடத் தகராறு: வயதான கடைக்காரரை கன்னத்தில் அறைந்த பெண் காவல் அதிகாரி மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

