மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தொழிலாளி கொலை: 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:31 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பழனியை அடுத்த பாலசமுத்திரம் சாலையில் வரட்டாறு பாலம் அருகே சனிக்கிழமை தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த தொழிலாளி முருகன் (45) கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலசமுத்திரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (22), நாகராஜ் (20), சங்கிலிதுரை (27) ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், திருப்பூா் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள தேநீா்க் கடையில் முருகன் வேலை செய்து வந்தாா். தோ்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லு வழியில் பழனி பேருந்து நிலையத்தில் இறங்கி மது குடித்தாா்.

அப்போது, அங்கு வந்த மணிகண்டன், நாகராஜ், சங்கிலிதுரைஆகியோா் அவருடன் அமா்ந்து மதுக் குடித்தனா். பிறகு, அவா்கள் மீண்டும் மதுப் புட்டிகளை வாங்கிக் கொண்டு வரட்டாற்று பாலம் அருகே அமா்ந்து மது குடித்தனா். அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சோ்ந்து முருகனை கொலை செய்தது தெரியவந்தது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.