மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மோகன்லால் படம் கைவிடப்பட்டது ஏன்? ஜித்து மாதவன் விளக்கம்!

நடிகர் மோகன்லால் உடனான படம் கைவிடப்பட்டதுக்கு இயக்குநர் ஜித்து மாதவன் அளித்த விளக்கம் குறித்து...

Mohanlal, Jithu Madhavan

மோகன்லால், ஜித்து மாதவன் - ENS

Published On :29 அக்டோபர் 2026, 2:37 pm IST

நடிகர் மோகன்லால் உடனான படம் கைவிடப்பட்டதுக்கு இயக்குநர் ஜித்து மாதவன், “இருவருக்கும் போதுமான கால்ஷீட் கிடைக்கவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.

மலையாளத்தில் ரோமான்சம், ஆவேஷம் ஆகிய திரைப்படங்களை இயக்கி தென்னிந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் ஜித்து மாதவன். தற்போது, சூர்யாவை வைத்து சீன் என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.

ழகரம் ஸ்டூடியோஸ் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடும் இந்தப் படம் வரும் நவ.6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்து மோகன்லால் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் மோகன்லால் தனது அடுத்த படங்களை இயக்கும் இயக்குநர்கள் பட்டியலைப் பகிர்ந்திருந்தார். அதில் ஜித்து மாதவன் பெயர் இடம்பெறவில்லை. சீன் படத்தின் புரமோஷனில் இது பற்றி ஜித்து மாதவன் கூறியிருப்பதாவது:

மோகன்லால் சாரை மனத்தில் வைத்துதான் திரைக்கதையை எழுதினேன். அதனை திடீரென மாற்றி வேறு ஒருவருக்காக மாற்ற முடியாது.

இந்தப் படத்துக்கான படப்பிடிப்புக்கு நீண்ட நாள்கள் தேவைப்படுகின்றன. அந்த நாள்களைக் குறைக்க முயற்சித்தேன். ஆனால், அது படத்துக்கு நல்லதல்ல. இதற்கு அவ்வளவு நாள்கள் நிச்சயமாகத் தேவைப்படும். சண்டைக் காட்சிகளிலும் நடிக்க வேண்டியுள்ளது. தற்போது மோகன்லால் சார் மிகவும் பிஸியாக இருக்கிறார். இதுதான் என்னுடைய புரிதல் என்றார்.

Summary

Jithu Madhavan explains why his film with Mohanlal was dropped

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.