மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சீன் ஒன்லைன் கதை இதுதான்: ஜித்து மாதவன்

சீன் திரைப்படம் குறித்து ஜித்து மாதவன்...

சூர்யாவுடன் ஜித்து மாதவன்

Published On :22 அக்டோபர் 2026, 12:08 pm IST

இயக்குநர் ஜித்து மாதவன் சீன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் வருகிற அக். 25 ஆம் தேதி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில், சீன் திரைப்படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேசியுள்ளார். இதில், “ஒரு வழக்கை விசாரித்து அதிலிருந்து விலகிய காவல்துறை அதிகாரி மீண்டும் அதே வழக்கை விசாரிக்க நியமிக்கப்படுகிறார். நாயகனான அந்த அதிகாரி விசாரணைக்காக புதிதாகத் தன் குழுவை உருவாக்குகிறார். இந்தக் குழுவை அவர் எப்படியெல்லம் கையாள்கிறார். இவர்களைச் சமாளிக்க முடியாமல் எப்படி திணறுகிறார் என்பதுடன் சந்தர்ப்ப சூழ்நிலை மாறும்போது அந்த வழக்கால் என்னென்ன நடக்கிறது என்பதை நகைச்சுவை மற்றும் குழப்பங்களின் அடிப்படையில் சீன் கதையை உருவாக்கியுள்ளோம்.

ரோமஞ்சம், ஆவேஷம் திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். என் மூன்றாவது திரைப்படமான சீன் தமிழிலேயே உருவாகியிருக்கிறது. நீண்ட காலம் கழித்து நடிகர் சூர்யா ஜாலியான திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடனும் நடிகை நஸ்ரியாவிடமும் பணியாற்றியது என் நண்பர்களுடன் பணியாற்றியது போல் மகிழ்ச்சியாக இருந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.

Director Jithu Madhavan has spoken about the movie Scene.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.