பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தஞ்சாவூரு மண்ணு எடுத்து... பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!

பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்....

பாடகர் கிருஷ்ணராஜ்

Published On :22 அக்டோபர் 2026, 11:16 am IST

தமிழ் சினிமாவின் பிரபல பாடகர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ் காலமானார்.

தமிழ் திரைப்பட பாடல்கள் வரலாற்றில் தனித்துவமான ஹிட்ஸ்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா. சில நாள்களுக்கு முன் தேவா மறைந்த போது நினைவுகூறப்பட்ட பல பாடல்களில் பாடகர் கிருஷ்ணராஜின் பாடல்களும் அடக்கம்.

தேவா இசையமைத்த அதிகாலை சுபவேளை திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான கிருஷ்ணராஜ் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, காத்து அடிக்குது, சிரிச்சுட்டு போனாலும், தஞ்சாவூரு மண்ணு எடுத்து உள்ளிட்ட ஹிட் பாடல்களைப் பாடியவர். தேவாவின் பெரும்பாலான திரைப்படங்களில் ஒரு பாடலையாவது பாடி 90-களின் விருப்பமான பாடகராக இருந்தவர். எவ்வளவு பாடல்களைப் பாடியிருந்தாலும் தஞ்சாவூரு மண் எடுத்து பாடலே இவரது சிறந்த பாடலாகக் கருதப்படுகிறது.

2000-களுக்குப் பின் பருத்திவீரனில், ’அய்யயோ’ கழுகு திரைப்படத்தில், ’ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்’ ஆகிய பாடல்களைப் பாடி அசத்தினார். இறுதியாக, சூரரைப் போற்று திரைப்படத்தில் நாலு நிமிஷம் பாடலைப் பாடியிருந்தார்.

இந்த நிலையில், 75 வயதான கிருஷ்ணராஜ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது உடல் சென்னை, வளசரவாக்கத்திலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தேவா மறைந்து சில நாள்களிலேயே அவரது ஆஸ்தான பாடகரும் மறைந்தது ரசிகர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Krishnaraj, one of the famous singers of Tamil cinema, has passed away.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.