மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஃபஹத் ஃபாசில் உடன் பணியாற்ற விரும்பும் இம்தியாஸ் அலி!

பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி அளித்த பேட்டி குறித்து...

Fahadh Faasil, Imtiaz Ali

ஃபஹத் ஃபாசில், இம்தியாஸ் அலி - படங்கள்: முகநூல்/ ஃபஹத் ஃபாசில், இம்தியாஸ் அலி

Published On :29 அக்டோபர் 2026, 11:38 am IST

பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி பிடிஐக்கு அளித்த பேட்டியில், “ஃபஹத் ஃபாசில் உடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஹிந்தியில் ராக்ஸ்டார், ஹைவே, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றவர் இயக்குநர் இம்தியாஸ் அலி. காதல் படங்களுக்கென மிகவும் புகழ்பெற்றவர் என்பது கவனிக்கத்தக்கது.

கடைசியாக இம்தியாஸ் அலி இயக்கத்தில் கடந்த ஜூனில் மெய்ன் வாபஸ் ஆவுங்கா என்ற படம் வெளியானது. நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் சுமார் ரூ.100 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ஏக்தா கபூர் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் திரைப்பட விழாவில் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் உடன் பணியாற்ற நான் விரும்பினேன். ‘தி இடியட் ஆஃப் இஸ்தான்புல்’ படம் எடுக்க முடியாமல் போனது. நாங்கள் இப்போதும் தொடர்பில்தான் இருக்கிறோம். இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறோம்.

ஒருமுறையாவது அவருடன் பணியாற்ற வேண்டுமென நினைக்கிறேன். நான் தயாரிக்கும் படத்தில் சாரா அர்ஜுன் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அதில் உண்மை இல்லை என்றார்.

இம்தியாஸ் அலியின் சகோதரர் ஹீர் ரஞ்ஜா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை இம்தியாஸ் அலி தயாரிக்கிறார். 2018ல் வெளியாகி வரவேற்பைப் பெறாத ’லைலா மஜ்னு’ என்ற படம் 2024ல் மறுவெளியீட்டில் அசத்தியது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் ஹீர் ரஞ்ஜா உருவாகிவருகிறது.

Summary

Imtiaz Ali hopes to collaborate with Fahadh Faasil, says previous attempt did not work out

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.