ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

லாஸ் ஏஞ்சலீஸில் திரையிடப்பட்ட ராமாயணா படத்துக்கு அமோக வரவேற்பு!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் திரையிடப்பட்ட ராமாயணா திரைப்படம் குறித்து...

A scene from the film Ramayana.

ராமாயணா படத்தின் காட்சி. - படம்: எக்ஸ் / சோனி பிக்சர்ஸ்

Published On :28 அக்டோபர் 2026, 8:13 pm IST

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலீஸில் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்ட ராமாயணா திரைப்படத்துக்கு, பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணா என்ற படத்தை உருவாக்கியுள்ளார். இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சன்னி தியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சோனி பிக்சர்ஸ் இந்தப் படத்தின் முதல் பாகத்தை உலகம் முழுவதும் வரும் நவ.5ஆம் தேதி வெளியிட இருக்கிறது. பல மொழிகளில் சர்வதேச அளவில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ், மான்ஸ்டர் மைன்ட் கிரியேஷன்ஸ் டி.என்.இ.ஜி. தயாரிப்பில் ரூ.4,000 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ராமனாக ரன்பீர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் லாஸ் ஏஞ்சலீஸில் அகாதெமி மியூசியத்தில் திரையிடப்பட்டுள்ளது. இங்கு திரையிட்டதற்கு காரணம் ரசிகர்களின் எதிர்பார்பை தூண்ட மட்டுமல்ல, நல்ல படம் என்ற நம்பகத்தன்மையைப் பெறுவதற்கும் என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாகம் நவ.5ஆம் தேதியும் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐமேக்ஸில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது.

Summary

'Ramayana' stars attend world premiere in US ahead of film's theatrical release on November 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.