மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராமாயணாவின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

ராமாயணா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

ramayana

ராமாயணா பட போஸ்டர் - படம்: எக்ஸ்

Published On :23 அக்டோபர் 2026, 2:17 pm IST

ராமாயணா திரைப்படத்தின், திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகான, ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ‘ராமாயணா’ திரைப்படம் உருவாகியுள்ளது.

மேலும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சன்னி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சோனி பிக்சர்ஸ் இந்தப் படத்தின் முதல் பாகத்தை உலகம் முழுவதும் வரும் நவ. 5 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. பல மொழிகளில் சர்வதேச அளவில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ், மான்ஸ்டர் மைன்ட் கிரியேஷன்ஸ் டி.என்.இ.ஜி. தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ராமனாக ரன்பீர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளரான ஹான்ஸ் சிம்மருடன் இணைந்து, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தியத் திரையுலகில் அதிக பொருள்செலவில் உருவாகியுள்ள ராமாயணா படத்தின் முதல் பாகத்திற்கான டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

இந்த நிலையில், ராமாயணா படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

Summary

A famous company has acquired the OTT rights of the film Ramayana after its theatrical release.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.