மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜெயிலர் 2 படத்தில் வரவேற்பைப் பெறும் பழக்கடை மூர்த்தி கதாபாத்திரம்..! யார் இந்த நமோ நாராயணா?

ஜெயிலர் 2 திரைப்படத்தில் கவனம் பெற்ற பழக்கடை மூர்த்தி கதாபாத்திரம் குறித்து...

This is the poster for the film 'Namo Narayana', a 'Jailer 2'.

நமோ நாராயணா, ஜெயிலர் 2 பட போஸ்டர். - படங்கள்: சன் பிக்சர்ஸ்

Published On :16 அக்டோபர் 2026, 3:17 pm IST

ஜெயிலர் 2 திரைப்படத்தில் மூர்த்தி என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுதியான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த கதாபாத்திரத்தில் நடித்த நமோ நாராயணாவை ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகிறார்கள்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று (அக்.15) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

நெல்சன் இயக்கிய ஜெயிலர் முதல் பாகம் கடந்த 2023ல் வெளியாகி ரூ.600 கோடி வசூலித்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இதில் பழக்கடை மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நமோ நாராயணா நடித்துள்ளார். இவர் திரையில் வரும் காட்சிகளில் ரசிகர்களிடம் சிரிப்பை வரவழைக்கிறார்.

”இந்த கதாபாத்திரத்தை வைத்து தனியாக ஒரு படத்தை எடுக்கலாம். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மெர்குரி, டோரதி படங்களை எடுக்கும்போது நெல்சன் ஏன் இவரை வைத்து தனியாக ஒரு படம் எடுக்ககூடாது?” என ரசிகர்கள் இயக்குநர் நெல்சனிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ரஜினி ஒரு பக்கம் படத்தை கவர்ந்தாலும் மற்றொரு பக்கம் பழக்கடை மூர்த்தி கவனம் பெறுகிறார் என சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள்.

யார் இந்த நமோ நாராயணா?

மென்பொருள் என்ஜினியராக பணியாற்றி வந்தவர் 2009ல் நாடோடிகள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், ஈசன், போராளி, குட்டி புலி, கொம்பன், ரஜினி முருகன், நாடோடிகள் 2, ராயன் படங்களில் நடித்துள்ளார்.

ஜெயிலர் 2 படம் இவரது சிறந்த படமாக இருக்கையில், ரசிகர்கள் இவரது கதாபாத்திரத்தையும் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.

Summary

Who is Namo Narayana? 'Jailer 2' actor wins fans' praise for his Moorthy character in Rajinikanth and Nelson's film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.