பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல்: நடிகர் சசிகுமார்

ஜெயிலர் - 2 குறித்து சசிகுமார் பதிவு...

நடிகர்கள் ரஜினிகாந்த், நமோ நாராயணன்

Published On :21 அக்டோபர் 2026, 12:05 pm IST

நடிகர் சசிகுமார் ஜெயிலர் - 2 திரைப்படம் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் அக்.15ல் உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்ததால் இப்படத்திற்குத் திரைகளும் காட்சிகளும் அதிகரித்தன. மேலும், சில மணிநேரங்களில் லட்சக் கணக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்ட சாதனையும் நிகழ்ந்தது.

ஆச்சரியமாக, ஜெயிலர் - 2 திரைப்படம் உலக அளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை அடைந்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் சசிகுமார் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், “சூப்பர் ஸ்டார் எப்போதும் சூப்பர் ஸ்டார்தான். இயக்குநர் நெல்சன் ஜெயிலர் - 2 படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றிக்குத் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன் ஆகியோருக்கு சொகுசுக் கார்களைப் பரிசளித்தார். இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கும் என்ன கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் பழக்கடை மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நமோ நாராயணாவுக்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Sasikumar has published a post about the movie Jailer - 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.