தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தலைவர் நிரந்தரம்... ஜெயிலர் - 2 திரைப்படத்திற்காக சஞ்சு சாம்சன் செய்த செயல்!

ஜெயிலர் - 2 திரைப்படத்தைக் காண சஞ்சு சாம்சன் காட்டிய ஆர்வம்...

நடிகர் ரஜினிகாந்துடன் சஞ்சு சாம்சன்.

Published On :20 அக்டோபர் 2026, 12:32 pm IST

ஜெயிலர் - 2 திரைப்படத்திற்காக இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் காட்டிய ஆர்வம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் அக்.15ல் உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்ததால் இப்படத்திற்குத் திரைகளும் காட்சிகளும் அதிகரித்தன. மேலும், சில மணிநேரங்களில் லட்சக் கணக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்ட சாதனையும் நிகழ்ந்தது.

ஆச்சரியமாக, ஜெயிலர் - 2 திரைப்படம் 4 நாளில் உலக அளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், குறுகிய நாள்களிலேயே இந்தச் சாதனையைச் செய்த முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெயரையும் ஜெயிலர் - 2 பெற்றுள்ளது.

இந்த நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ஜெயிலர் - 2 திரைப்படத்தைக் காண ஒரு திரையரங்கத்தையே முன்பதிவு செய்துள்ளார். இதில், தன் மனைவி, சக கிரிக்கெட் வீரர்கள், நண்பர்களுடன் ஜெயிலர் - 2 திரைப்படத்தைக் காண்கிறார். மேலும், தமிழ் சினிமாவை புரிந்துகொள்ளக் கூடிய இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரிகள் மற்றும் துணை பயிற்சியாளர்களும் இப்படத்தைக் காண உள்ளதாகக் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினியின் திரைப்படங்களை முதல் நாளே பார்த்துவிடும் அளவிற்கு சஞ்சு சாம்சன் தீவிர ரசிகர் ஆவார். இப்படத்தைப் பார்க்க கொஞ்சம் தாமதமாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Indian cricketer Sanju Samson's enthusiasm for the movie Jailer 2 has surprised many.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.