பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பவர்பிளேவில் ஆட்டத்தை முடிப்பது மிகவும் முக்கியம்: சஞ்சு சாம்சன்

பவர்பிளேவில் ஆட்டத்தை முடிப்பது மிகவும் முக்கியம் என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

Sanju Samson

சஞ்சு சாம்சன் - படம் | பிசிசிஐ

Published On :23 அக்டோபர் 2026, 3:03 pm IST

பவர்பிளேவில் ஆட்டத்தை முடிப்பது மிகவும் முக்கியம் என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று (அக்டோபர் 22) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

இந்திய அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 33 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பவர்பிளேவில் ஆட்டத்தை முடிப்பது மிகவும் முக்கியம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நாங்கள் வித்தியாசமாக விளையாடியிருக்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால், ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான அணுகுமுறை இருக்கும். பவர்பிளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என ஒவ்வொரு கட்டத்திலும் அணுமுறை வித்தியாசமாக இருக்கும்.

அதனால், 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடினாலும் பவர்பிளேவில் ஆட்டத்தை முடிந்த அளவுக்கு முடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனை இந்திய அணி நன்றாக செய்து வருகிறது. பவர்பிளேவில் நாங்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். சில நேரங்களில் அதில் தோல்வி ஏற்பட்டாலும், நாங்கள் எங்கள் அணுகுமுறையை மாற்றவில்லை என்றார்.

Summary

Indian opener Sanju Samson has said that it is very important to finish the game in the powerplay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.