மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகியுள்ளார்.

Ishan Kishan

இஷான் கிஷன் - படம் | பிசிசிஐ

Published On :23 அக்டோபர் 2026, 1:29 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகியுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்று (அக்டோபர் 22) தொடங்கியது.

கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்றையப் போட்டியில் இஷான் கிஷன் 3 பந்துகளில் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியின்போது, இஷான் கிஷனுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகியதை உறுதிசெய்த பிசிசிஐ, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (அக்டோபர் 24) கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.

Summary

Ishan Kishan has been ruled out of the second T20I against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.