தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இஷான், ஷ்ரேயாஸ் அரைசதம்: நியூசிலாந்துக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது டி20 போட்டி குறித்து...

Ishan Kishan, Shreyas Iyer

இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் - படம்: பிசிசிஐ

Published On :1 நவம்பர் 2026, 2:40 pm IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது டி20 போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 61 ரன்கள் எடுத்தார்.

இந்தப் போட்டியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் - ஸ்ரேயாஷ் ஐயர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்கள்.

இஷான் கிஷன் 61, ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். நமன் திர் 33, நிதீஷ் குமார் 22 ரன்கள் எடுத்தார்கள்.

நியூசிலாந்து சார்பில் ஆடம் மில்னே 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் நியூசிலாந்து சிறப்பாக பந்துவீசியது.

ஏற்கெனவே இந்தியா இந்தத் தொடரை 3-1 என வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்வர்குமார் இந்தப் போட்டியில் விளையாடுவார்கள். அதனால், வெற்றியுடன் முடிக்கவே இந்தியா திட்டமிட்டுள்ளது.

Summary

Half-centuries for Ishan and Shreyas: India sets New Zealand a target of 192 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.