மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஃபகர் ஸமான் சதம்: முத்தரப்பு ஒருநாள் தொடரினை வென்றது பாகிஸ்தான்!

முத்தரப்பு ஒருநாள் தொடரினை வென்ற பாகிஸ்தான் அணி குறித்து...

Fakhar Zaman, overjoyed after scoring a century

சதம் அடித்த மகிழ்ச்சியில் ஃபகர் ஸமான் - படம்: ஐசிசி

Published On :1 நவம்பர் 2026, 12:04 pm IST

இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.

பாகிஸ்தானில் லாகூரில் உள்ள கடாஃபி திடலில் நேற்றிரவு (அக்டோபர் 31) முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 325/8 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 131 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் சார்பில் நான்கு வீரர்கள் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் 331/7 ரன்கள் எடுத்து வென்றது. இதில் தொடக்க வீரர் ஃபகர் ஸமான் 127 ரன்கள் குவித்து அசத்தினார்.

சாத் பெய்க் 74, அராஃபத் மின்ஹாஸ் 61 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்கள். இலங்கை சார்பில் தில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஆட்ட நாயகனாக ஃபகர் ஸமான் தேர்வாக, தொடர் நாயகனாக அராஃபத் மின்ஹாஸ் தேர்வானார். இருவருமே பாகிஸ்தான் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Summary

ODI Tri-Series, Fakhar Zaman century Pakistan won by 3 wkts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.