மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இங்கிலாந்துடன் பலப்பரீட்சை..! முத்தரப்பு ஒருநாள் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா பாகிஸ்தான்?

இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்து...

Pakistan and England ODI captains

பாகிஸ்தான் - இங்கிலாந்து ஒருநாள் அணிகளின் கேப்டன்கள் - படம்: எக்ஸ்/ இங்கிலாந்து கிரிக்கெட்

Published On :25 அக்டோபர் 2026, 1:18 pm IST

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று கடாஃபி திடலில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது. இந்தப் போட்டியில் வென்றால், முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணி ஒரு போட்டியில் வென்று இரண்டாமிடம் வகிக்கிறது. இரண்டு போட்டிகளில் தோல்வியுற்ற இங்கிலாந்து கடைசி இடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெல்ல வேண்டும். இல்லையெனில் அந்த அணி இறுதிப் போட்டிக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படும். கிட்டதட்ட இந்தப் போட்டி இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா என்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

பாகிஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஃபகார் ஸமான், சைம் அயூப், பாபர் அசாம், சாத் பைக் (கீப்பர்), சல்மான் அஹா, ஹசன் நவாஸ், ஷதாப் கான், அராபத் மின்ஹாஸ், ஷாஹீன் அப்ரிடி (கேப்டன்), ரசாவுல்லா, ஹாரிஸ் ரௌஃப்.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: டாம் பான்டன், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோர்டான் காக்ஸ் (விக்கெட் கீப்பர்), சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், கஸ் அட்கின்சன், ஹென்றி குரோகோம்ப்

Summary

A tough test against England! Will Pakistan advance to the final of the tri-nation ODI series?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.