மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டி20 கிரிக்கெட்டில் புவனேஷ்வர் குமாரின் சாதனையை முறியடித்த அர்ஷ்தீப் சிங்!

இந்திய வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் நிகழ்த்திய சாதனை குறித்து...

India's Arshdeep Singh celebrates the wicket of New Zealand's Tim Seifert during the second T20 cricket international between New Zealand and India in Christchurch, New Zealand, Saturday, Oct. 24, 2026. AP/PTI(AP10_24_2026_000090B)

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் அர்ஷ்தீப் சிங் - PTI

Published On :25 அக்டோபர் 2026, 12:43 pm IST

ஓராண்டில் அதிகமான விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சக வீரர் புவனேஷ்வர் குமாரின் சாதனையை முறியடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் இந்திய அணி 19.5ஆவது ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் திலக் வர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்தப் போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன்மூலம் ஓராண்டில் டி20யில் அவர் அதிக விக்கெட்டுகள் (38) எடுத்த இந்தியராக சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் 2022 காலகட்டத்தில் 37 விக்கெட்டுகள் எடுத்தது சாதனை படைத்திருந்தார். தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக அதே ஆண்டுதான் புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியதால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

புவனேஷ்வர் குமார் 31 இன்னிங்ஸில் 2022ல் 37 விக்கெட்டுகள் எடுக்க, 2026ல் அர்ஷ்தீப் சிங் 26 இன்னிங்ஸிலேயே 38 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

உலக அளவில் ஓராண்டில் 39 விக்கெட்டுகளுடன் அயர்லாந்தின் ஜோஷுவா லிட்டில் முதலிடத்தில் இருக்கிறார். இந்தியாவுக்கு இன்னும் 3 டி20 போட்டிகள் இருப்பதால், அர்ஷ்தீப் இந்த சாதனையை முறியடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஜோஷுவா லிட்டில் இந்த விக்கெட்டுகளை அதிகமாக துணை நாடுகளிடம் விளையாடிதான் எடுத்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தியா - நியூசிலாந்து மோதும் மூன்றாவது டி20 போட்டி வரும் அக்.27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Summary

Arshdeep breaks Bhuvneshwar's national record for most wickets in calender year .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.