தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 303 ரன்கள் இலக்கு!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்துள்ளது.

Pakistani player Hasan Nawaz

பாகிஸ்தான் வீரர் ஹாசன் நவாஸ் - படம் | AP

Published On :20 அக்டோபர் 2026, 5:54 pm IST

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ராவல்பிண்டியில் இன்று (அக்டோபர் 20) நடைபெற்று வரும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் விளையாடியது.

இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 303 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஹாசன் நவாஸ் 74 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அராஃபாத் மின்ஹாஸ் 58 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஃபஹீம் அஷ்ரஃப் 39 ரன்கள், ஷாத் பெய்க் 35 ரன்கள், பாபர் அசாம் 34 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர் 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித் மற்றும் சாம் கரண் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

Summary

Pakistan, playing first against England in the tri-nation ODI series, scored 302 runs for the loss of 9 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.